Posts

2022 வாசித்த புத்தகங்கள்

*ஆண்டு 2022 -   வாசித்த புத்தகங்கள்*   *ஜனவரி*  1. பொன்னுலகம் - சுரேஷ் பிரதீப்  *பிப்ரவரி*  Nil  *மார்ச்*  1.வாசிப்பின் வழிகள் - ஜெயமோகன் 2. குகை - ஜெயமோகன் 3. வான் நெசவு - ஜெயமோகன்  4. பத்து லட்சம் காலடிகள் -ஜெயமோகன்  5.பைத்திய ருசி - கணேசகுமாரன்  6.அவளது வீடு - எஸ்.ராமகிருஷ்ணன்  *ஏப்ரல்* 1.இளையராஜாவின் முதல்வர் வேட்பாளர் இல்லை - டி.தருமராஜ்  2.காதுகள் - எம்.வி.வெங்கட்ராம் 3.நிலவழி - எஸ்.ராமகிருஷ்ணன்  4.ஒளிர்நிழல் -  சுரேஷ் பிரதீப் 5.சுதந்திரத்தின் நிறம் -  லாரா கோப்பா (தமிழ்- B.R.மகாதேவன்)  *மே* 1. டான்டூனின் கேமிரா - எஸ்.ராமகிருஷ்ணன் 2. உலகை வாசிப்போம் -  எஸ்.ராமகிருஷ்ணன் 3. எஞ்சும் சொற்கள் - சுரேஷ் பிரதீப் 4. விருந்து - கே.என்.செந்தில் 5. காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை - ரா.கிரிதரன் 6. விசிறி (தொகுக்கப்படாத சிறுகதைகள்) - கா.நா.சு. 7. இராசேந்திரசோழன் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் *ஜூன்* 1.நீரில் அலையும் முகம் - அ.வெண்ணிலா 2.மழைக்கண் -  செந்தில் ஜெகநாதன்  3. தாடகை மழையடிவாரத்தில் ஒருவர் - ஜெயமோகன் 4.இக்கிகய் - ஹெக்டர் கார்சியா & பிரான்செஸ்க்  மிராயியஸ் 5.வெயில் பறந்தது - மதார்

ஆசான் மாரியப்பன்

 இந்த நினைவுகளை எழுதுவதற்கு முன்பாக, 1996 ஆம் ஆண்டு எனக்கு அறிவியல் வகுப்பு எடுத்த மரியாதைக்குரிய ஆசான் திரு.மாரியப்பன் அவர்களின் பொற்பாதங்களில் எனது பகிரங்க மன்னிப்புகளை சமர்ப்பிக்கின்றேன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 திருவாரூர் நகரத்தில் இயங்கி வருகின்ற வடபாதிமங்கலம் சோமசுந்தரம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நான், எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த தருணம் அது.. படிப்பில் அதிக கவனம் செலுத்தும் மாணவன்தான் நான், என்றாலும் எனது சேட்டைகளும் சற்றேறக்குறைய இருந்தது. நான் எட்டாம் வகுப்பு 'இ' (c)  பிரிவில் பயின்று வந்தேன். எனக்கு வகுப்பு ஆசிரியர் மரியாதைக்குரிய ஆசான் திரு. ராதாகிருஷ்ணன் அவர்கள். எப்படியோ கடுமையாக படித்தாலும் என்னால், எனது வகுப்பில் மூன்றாம் தரத்தை (3rd Rank) விட்டு முன்னேறி நகர முடியவில்லை. அப்போது முதல் தரம் எனது நண்பன் பாலகுமார், இரண்டாவது தரம் எனது நண்பன் எஸ்.வெங்கடேஷ் ஆகியோர் எடுத்து இருப்பார்கள். இருப்பினும், முயல்வேன் முயல்வேன்  தோற்கடிக்கப்படுவேன்.  நண்பர்களிடம் தோற்பது ஆகச்சிறந்த மணிமகுடம் அல்லவா.. இப்படியாய் கடந்து வந்து கொண்டிருந்தது, எனது எட்டாம் வகுப்பு பள்ளி

💓இதய பறவை💓

இதய பறவை என்றோ  ஒரு நாள்..  பறந்து சென்ற  என் இதய பறவை.. இன்றுவரை  என்னில் வந்து சேரவில்லை.. தரைத்தளத்தில் இருந்து கொண்டு என்னவென்று  கேட்டால்..  பத்தாவது  தளத்திலிருந்து எட்டிப் பார்த்து கூறுகின்றாள்  அவள்.. 'என் நெஞ்சு  கூட்டுக்குள் வைத்து பாதுகாக்கின்றேன்' என்று..  பசித்தால்  என்ன செய்வாய்  என்றேன்..  மூச்சுமுட்ட  முத்த தீனி கொடுத்து பராமரிப்பேன் என்று பதிலளித்தாள்  அவள்.. எப்போது தான்  என் பறவைக்கு  விடுதலை  என்றேன்  நான்.. இந்த  ஜென்மத்தில்  வாய்ப்பில்லை  என்றாள் அவள்..  நான் வளர்க்க  உன் இதய  பறவை கிடைக்குமா  என்றேன்..  அது எப்போதும் உன்னைத்தானே வட்டமிட்டு  கொண்டுள்ளது.. பிடித்துக்கொள்  என்றாள்  அவள்..  இப்போது சில மாதங்களாய்.. மாறி மாறி  இதய பறவையை பராமரித்து  வருகிறோம் நாங்கள்.. அவ்வப்பொழுது  கூடி பின்பு கலைகின்றோம்.. சீக்கிரமாய்  ஒன்று சேர  துடிக்கின்றோம்.. எப்பொழுதுமே  ஒன்றாகவே  இருக்க நினைக்கின்றோம்..  எனினும்  அதற்கு.. இன்னும் காலங்கள்  உள்ளதுவாம்.. ஏனென்றால்  எங்கள்  இருவருக்கும்  தற்போது தான்  வயது நான்கரை   ஆகிறது..      ..கலை.கார்ல்மார்க்ஸ்💓

விதைக்கப்பட்ட மலர்கள்

"விதைக்கப்பட்ட மலர்கள்"     (குடந்தை தீ விபத்து) கல்யாணமாகி கருத்தரிக்காம கவலையோடு  இருந்த அவளுக்கு.. புள்ள வரம் கிடைக்க சோதிட காரன்  ஒருவன் சொன்னா..  அரச மரத்த  நாலு சுத்து.. புள்ளையாருக்கு  ஆயிரத்தெட்டு  தேங்காய் உடை  என்று.. அவன் சொன்ன  நாலு சுத்த  நாலு வருசமா  சுத்துறா அவ.. ஆயிரத்தெட்டு தேங்காய  அடுப்பங்கரை  எடுத்துட்டு  போயிருந்தா  சட்னிக்காவது ஆகியிருக்கும்..  வேண்டாத தெய்வமில்ல வேதனை இன்னும்  கரை தொடல.. எத்தனையோ  மருந்து திண்ணாச்சு.. அவளுக்கும் அவ கணவனுக்கும்  உடம்புக்கு ஒன்னும்  குறை இல்லனு மெடிக்கல் ரிப்போர்ட்டும் சொல்லியாச்சி.. இப்படியே நாட்கள்  ஓடிக் கிடக்க.. ஒரு நாள் அவ  குளிக்கிற தேதியும் தள்ளிப்போக.. ஒட்டு மொத்த மகிழ்ச்சியையும்  ஒண்ணா சேர்த்து.. மொத்தமா கொடுத்துப்புட்டா  அவ கணவன் கிட்ட.. வக்கனையா  சாப்பிட்டா.. குமட்டல் வந்தாலும் குருதியே புரண்டாலும்.. சத்தாக சாப்பிடுவா வயிற்றில் வளரும்  சிசுவுக்காக.. பொத்தி பொத்தி  வளர்த்து வந்தா.. பூ போல காத்து  வந்தா.. பத்து மாசம் நெருங்கும் போது பயத்திலதான்  பதறி நின்னா.. கணவன் கையை  பிடிச்சு கிட்டா  கண்ணீரில் கவித படிச்சிகிட

கடந்த கால தழும்புகள்

'கடந்த காலத் தழும்புகள்' எனக்கு மிகவும்  பசுமையாக உள்ளது.. திருவாரூர் நகரத்தில் உள்ள சைவப்பிரகாச உதவிபெறும் நடுநிலைப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்.  ஒரு நாள் பள்ளிக்கூடம் முடிந்து மாலை நேரத்தில் வீடு திரும்பி கொண்டிருந்த பொழுது, எடத்தெருவும் பனகல் பார்க் சாலையும் சந்திக்கும் இடத்தில் உள்ள, சர்ச்க்கு எதிர்புறம் நான்கைந்து வீடுகள் வரிசையாக இருக்கும். அதற்கு எதிரில் ஒரு தாத்தா கடை ஒன்று இருந்தது (தற்பொழுதும் உள்ளது). அந்தக் கடைக்கு அருகாமையில் காலனி வாடகை வீடு குடியிருப்பு இருந்தது (இன்றும் உள்ளது). அந்த வீடுகளுக்கு வந்த ஒரு பால்காரர், பெரிய பால் கேனை மிதிவண்டியின் பின்னால் உள்ள கேரியரில் கட்டி வைத்துக்கொண்டு பால் வினியோகம் செய்து கொண்டிருந்தார்.  அந்தக் காலனிக்கு வெளியில் உள்ள சாலையில் பால் வண்டியை நிறுத்திவிட்டு, ஒவ்வொரு வீட்டிற்கும் தனது அரை லிட்டர்  குவளையில் பால் பிடித்து ஒவ்வொரு வீடாக பாலை கொடுத்து வந்த வண்ணம் இருந்தார். அவர் ஒவ்வொரு முறையும் பாலை, பால்கேனில் இருந்து  திருகி வெளியில் எடுப்பதும், மூடுவதுமாக இருந்தது, எனக்கு மிகுந்த வேடிக்கையாக இருந்தது.